கன்னியாகுமரி – திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள்எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி- திப்ரூகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை, சென்னை வழியாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரிலிருந்துஅசாம் மாநிலத்தின் திப்ரூகர்என்ற இடத்துக்கு2011ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் வாராந்திரரயில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டுவருகிறது. இந்த ரயில் இந்தியாவிலேயே அதிகதூரம் அதாவது4273 கி.மீ இயக்கப்படும் ரயில்ஆகும். இந்த ரயில் முதலில் கொச்சுவேளியிருந்துஎர்ணாகுளம் வழியாக திப்ரூகருக்கு சிறப்புரயிலாக இயக்கப்பட்டு பின்னர்புதிய நிரந்தர ரயிலாக இயக்கலாம் என்று ரயில்வே பட்ஜெட்டின் போதுதிட்ட கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.இந்த நிலையில் கொச்சுவேளி ரயில் நிலையத்தில் இடநெருக்கடிஏற்படும் என்றும் வேறு புதிய ரயில்கள் கொச்சுவேளியில் இருந்துகேரளா பயணிகளுக்கு இயக்கமுடியாமல் இந்த ரயில் பெட்டியால் பிரச்னை வரும் என்று அறிந்த திருவனந்தபுரம் கோட்டஅதிகாரிகள் கன்னியாகுமரிக்கு புதியரயில் இயக்கப்படுகிறது என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர்.
கடந்த2020ம் ஆண்டு ரயில்வே வரியம் இந்த கன்னியாகுமரி திப்ரூகர்வாராந்திர ரயிலை வாராந்திர ரயில் சேவையிலிருந்து தினசரிரயிலாக மாற்றம் செய்யப்படும் என்றுஅறிவித்தது. இதன்படி கடந்த2023ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்துக்கு நான்குநாட்கள் ரயிலாக இயங்கி வருகின்றது. குமரி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பயணசீட்டு கிடைக்காமல் இருக்கமுழு ரயிலும் காலியான ஏன் இந்த ரயில் இவ்வாறு இயக்கப்படுகின்றது என்றுஅனைவரது மனதிலும் கேள்வி எழுகிறது. தற்போது வாரத்திற்கு நான்குநாட்கள் செல்லும் ரயிலை தினசரி ரயிலாக மாற்றம் செய்ய ரயில்வேதுறை திட்டமிட்டுஅதற்கான பணிகளை விரைவாக செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்த ரயில் தினசரி இயக்குவதற்கு தேவையானகாலி பெட்டிகள் நாகர்கோவில் வந்துவிட்டது.
.சென்னை முதல் கன்னியாகுமரி வரைஉள்ள இருப்பு பாதை இருவழிபாதையாக ஒருமாதத்துக்குள் மாற்றம் பெற்றுவிடும் நிலையில்உள்ளது. இந்த நிலையில் இந்த கன்னியாகுமரி திப்ரூகர்இயக்கப்படும் வாரத்துக்கு மூன்றுநாள் சேவையை திருநெல்வேலி, மதுரை,திருச்சி, விழுப்புரம் சென்னைவழியாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுக்கின்றது. இந்தரயிலை திருநெல்வேலி, மதுரை,திருச்சி, சென்னை வழியாக இயக்கும் போது குமரி மாவட்ட பயணிகள் தங்கள் தலைநகர் சென்னைக்கு செல்ல ரயில்சேவை கிடைக்கும். இவ்வாறு சென்னை வழியாக இயக்கும் பட்சத்தில் சுமார்250 கி.மீக்கு குறைவான கட்டணம் செலுத்தி குறைந்த பயணநேரத்தில் வடகிழக்குமாநிலங்களில் உள்ள நகரங்களுக்கு பயணிக்கலாம். இது மட்டும் இல்லாமல் குமரி மாவட்ட பயணிகள் தமிழகத்தில் உள்ளபல்வேறு இடங்களுக்கு செல்லபகல் நேர ரயில் சேவையும் தமிழகத்தில் உள்ள12 மாவட்டங்களை சார்ந்த பயணிகளுக்கு வடகிழக்குமாநிலங்களை சார்ந்த பகுதிகளுக்கு செல்லநேரடி ரயில் சேவையும் கிடைக்கும்.சென்னையை தவிர தமிழ்நாட்டின் மத்தியமற்றும் தென்மாவட்டங்களிலிருந்துவடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லஎந்த ஒரு நேரடி ரயில் சேவையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தென்மாவட்டங்களிலிருந்துதமிழகம் வழியாக பயணம் செய்ய1000 கி.மீக்கு மேல் பயணம் செய்யும் ஒரு தினசரி ரயில் கூட இதுவரை மதுரை மற்றும் திருச்சி கோட்டங்களிலிருந்துபுறப்படும் படியாகவோ அல்லது இந்த கோட்ட எல்லைக்குள் இயங்கும்படியாகவோ ரயில்வேதுறையால் அறிவித்துஇயக்கப்படவில்லை.
0
Leave a Reply